ETV Bharat / state

காய்கறி வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பொருள்கள் பறிமுதல்! - 6 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி: பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கடத்த முயன்ற 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

gutka seized
gutka seized
author img

By

Published : May 11, 2020, 6:32 PM IST

கிருஷ்ணகிரி சோதனைச் சாவடி அருகே தாலுகா காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக காய்கறிகள் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அதில், லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

காவல்துறையினரைக் கண்ட லாரி ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். இதனையடுத்து பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி சென்ற லாரி மற்றும் அதில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய ஓட்டுநர் சரவணன் மற்றும் லாரி உரிமையாளர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

காய்கறிகள் வாகனங்களை தடை செய்யக் கூடாது என அரசு அறிவுத்தியுள்ள நிலையில் சமூக விரோதிகள் அதனை சாதகமாக பயன்படுத்தி சட்டவிரோதமாக குட்கா கடத்திச் செல்ல பயன்படுத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தாய்மையை போற்றுவோம்... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.