கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்தைச் சேர்ந்த 520 நபர்கள், கிருஷ்ணகிரி வட்டத்தில் 141 நபர்கள், பர்கூர் வட்டத்தில் 405 நபர்கள், தருமபுரி மாவட்டத்தில் 36 நபர்கள், சேலம் மாவட்டத்தில் 191 நபர்கள், நாமக்கல் மாவட்டத்தில் 296 நபர்கள் என மொத்தம் ஆயிரத்து 589 பேர் அவர்களது சொந்த மாநிலமான பிகாரின் முஜாபர்பூர் நகரத்திற்கு சிறப்பு ரயில் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
முன்னதாக பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு மருத்துவச் சோதனை செய்யப்பட்டதுடன் ரயில் பெட்டிகள் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
வெளிமாநிலப் பயணிகளுக்கு ரயில் பயணத்தின்போது அவர்களுக்கு உண்ண உணவாக பிஸ்கட், சப்பாத்தி, புளிசாதம், குஷ்கா, ஆரஞ்சு பழம், வாழைப்பழம், மாம்பழம், குடிநீர் பாட்டிலுடன் குழந்தைகளுக்கு பால் பவுடர் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: உயிரிழந்த தாயை எழுப்பும் குழந்தை... நெஞ்சை உருக்கும் கொடுமை!