ETV Bharat / state

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் தீ...!

கிருஷ்ணகிரி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

File pic
author img

By

Published : May 9, 2019, 11:54 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று (மே 9) அதிகாலையில் தலைமை ஆசிரியர் அறையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து தொடர்பாக சூளகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று (மே 8) பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதையொட்டி தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர் திட்டமிட்ட சதியால் தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீர் தீ விபத்து

அதிகாலையில் தீவிபத்து நடந்ததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. கழிவறை கதவு மட்டும் சேதம் அடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் இன்று அதிகாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
நேற்று பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதையொட்டி தேர்வில் தோல்வியடைந்த மாணவன் அல்லது மாணவியின் பெற்றோர் திட்டமிட்ட சதியால் தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என்று என்று கூறப்படுகிறது. தீவிபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை கழிவறை கதவு மட்டும் பெருத்த சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Visual on ftp

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.