ETV Bharat / state

ஒசூரில் 5ஆவதுசிப்காட் அமைக்க எதிர்ப்பு.. 17ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்..

ஒசூர் அருகே விளைநிலத்தில் 5ஆவதுசிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 17ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

17-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

author img

By

Published : Jan 21, 2023, 4:27 PM IST

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 மிகப்பெரிய தொழிற்பேட்டைகள் அமைந்திருப்பதால் 3,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிப்பள்ளி, மருதாண்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 2,400 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள் கைப்பற்றப்பட்டு 3ஆவது சிப்காட் அமைய உள்ளது.

ஆனால், பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. குருபரப்பள்ளி பகுதியில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் 4ஆவது சிப்காட் அமைப்பதற்கான பணிகள் ஏறக்குறைய தொடங்கியுள்ளன. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5ஆவது சிப்காட்டாக சூளகிரி ஒன்றியத்தில் உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிக்குட்பட்ட கிராம விளைநிலத்தில் 3,800 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த 3 ஊராட்சிகளில் 30 கிராமங்கள் அடங்கி உள்ளன. 50-க்கும் அதிகமான வீடுகளும் இடிக்க வேண்டிய சூழலில் 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இப்பகுதியில் தக்காளி, கேரட், பீன்ஸ், பட்டன் ரோஸ், செண்டு மல்லி உற்பத்தியும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பசுமை நிறந்த இப்பகுதியில் சிப்காட் அமைத்து விவசாயத்தை தடுக்க வேண்டாமெனவும், வேறு பகுதிகளில் சிப்காட் அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் (ஜன.19) விவசாயிகள் 14ஆவது நாளாக உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர் சிலர், உத்தனப்பள்ளி காவல்நிலையம் எதிரே உள்ள 2 செல்போன் டவர்கள் மீது ஏறி கைகளில் கருப்புக்கொடியை பிடித்துக்கொண்டு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) செல்லகுமார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் நேரில் வர வேண்டுமென விவசாயிகள் விடுத்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியில் தெரிவித்து அழைத்தபோது, வர மறுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் விவசாயிகளுடன் ஒசூர் - இராயக்கோட்டை சாலை உத்தனப்பள்ளியில் எம்பி உட்பட 100 -க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 3 மணி நேரமாக நடைபெற்றது. ஓசூர் சாராட்சியர் சரண்யா, மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோரின் பேச்சுவார்த்தையிலும் பலனித்காததால் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் உட்பட 140 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

10 நாட்களில் சிப்காட் அமைப்பது குறித்து விரிவாக பதிலளிக்கப்படும் என்கிற வருவாய்த்துறையினர் வாக்குறுதியை ஏற்று செல்போன் டவரிலிருந்த 14 பேர் கீழே இறங்கினர். அதுவரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைப்பெறும் எனவும், விவசாயிகள் அறிவித்துள்ளனர். இன்றுடன் 17 -வது நாளாக விவசாயிகளின் காத்திருப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைநிலத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட மாட்டாது என்கிற உறுதியை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்பியே போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி இருப்பதால் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்கும் பணியை கைவிடுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: கடையநல்லூர் அருகே களைகட்டிய பூக்குழி திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.