கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு முனியம்மாள் என்கிற மூதாட்டியை மிதித்து கொன்றது. அதன்பின், இந்த காட்டு யானைகள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு புதன்கிழமை வந்தது.
பின் அணையில் இறங்கி ஆனந்த குளியல் போட்டன. இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற வனத்துறையினர், யானைகளை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
யானைகள் ஆனந்த குளியல் போடும் காட்சியை காண அணையின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நீர் தேக்கத்திற்கு சென்றனர்.
இதையடுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணையை ஒட்டிய கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, நந்திமங்கலம், சித்தனப்பள்ளி, உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.