ETV Bharat / state

காட்டு யானைகளால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ELEPHANT DISTURBANCE FOREST WARNING TO PUBLIC
author img

By

Published : Aug 3, 2019, 5:23 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெத்தகுள்ளு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டுயானைகள் நேற்று இரவு பல்வேறு கிராமங்கள் வழியாக பெத்தகுள்ளு கிராமத்தை வந்தடைந்தது. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு கரும்புகளை சேதப்படுத்திய யானைகள், இந்த கிராமத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் முகாமிட்டு நிற்கின்றன. இதனால் சுற்றுப்புற கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காட்டு யானைகளினால் பத்துக்கு மேற்றபட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை

இதனிடையே காட்டுயானைகள் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் முகாமிட்டு நிற்பதால் அருகே உள்ள பெத்தகுள்ளு, சின்னகுள்ளு, சாமனப்பள்ளி, தம்மநாயக்கனப்பள்ளி, தொடுதேப்பள்ளி, கதிரேப்பள்ளி, மாரசந்திரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று மாலை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகள் : 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை
Body:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெத்தகுள்ளு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டுயானைகள் அங்கு உற்சாக குளியல் போட்டு வந்தன. இந்த காட்டுயானைகள் நேற்று இரவு பல்வேறு கிராமங்கள் வழியாக பெத்தகுள்ளு கிராமத்தை வந்தடைந்தது. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு கரும்புகளை சேதப்படுத்திய காட்டுயானைகள் இந்த கிராமத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் முகாமிட்டு நிற்கின்றன.
இதனால் சுற்றுப்புற கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே காட்டுயானைகள் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் முகாமிட்டு நிற்பதால் அருகே உள்ள பெத்தகுள்ளு, சின்னகுள்ளு, சாமனப்பள்ளி, தம்மநாயக்கனப்பள்ளி, தொடுதேப்பள்ளி, கதிரேப்பள்ளி, மாரசந்திரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இன்றுமாலை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டவும் திட்டமிட்டுள்ளனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.