கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமியை, அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா (60) என்கிற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட கிராமத்தினர் கிருஷ்ணப்பாவை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து முதியவரை கிராமத்தினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனா். இதையடுத்து காவல் துறையினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினா்.
பின்னர், பாலியல் சீண்டல் குறித்து முதியவர் கிருஷ்ணப்பாவிடம் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கைது செய் ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.