காவேரி பட்டினத்தில் இருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கிருஷ்ணகிரி நோக்கி சென்றது. இந்நிலையில், கே.ஆர்.பி அணை அருகே சென்றபோது பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த முட்டைகள் சாலைகளில் உடைந்து வீணானது. இதையடுத்து அருகில் இருந்த மக்கள் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், முட்டைகள் சாலைகள் நடுவே விழுந்து உடைந்ததில் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஒரு சிலர் முட்டை கழிவுகளால் வழுக்கி கீழே விழுந்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், முட்டை கழிவுகளை அகற்றினர். பின்னர் வாகனங்களை செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
சேதமான முட்டைகளின் விலை மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.