ETV Bharat / state

தேமுதிக கூட்டணிக்கும் தயார், தனித்து போட்டியிடவும் தயார் - எல்.கே. சுதீஷ்

author img

By

Published : Feb 15, 2021, 6:23 PM IST

தேமுதிகவை பொறுத்த வரை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கும் தயார், தனித்து போட்டியிடவும் தயார் என அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கூட்டணிக்கும் தயார்
தேமுதிக கூட்டணிக்கும் தயார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, ஓசூர் ஆகிய 2 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதில் வேப்பனஹள்ளி தொகுதியை பொறுத்த வரையில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார். வேலூர் மண்டலத்தை பொறுத்த வரை 32 தொகுதிகள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் வேப்பனஹள்ளி, ஓசூர் தொகுதிகளைக் கேட்டு வெற்றி பெறுவோம்.

நாம் இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். நமக்கு தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்கின்ற நம்பிக்கை உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை தனித்து போட்டியிடவும் தயார் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இளைஞர்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு பாஜக செவிமடுக்கவேண்டும் - ஸ்டாலின் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.