ETV Bharat / state

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - பர்கூர் பகுதி ஏரிகள் தூர்வாரும் பணி ஆய்வு

கிருஷ்ணகிரி: பர்கூர் பகுதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
author img

By

Published : Aug 22, 2019, 6:09 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பர்கூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பில் 165 ஏரிகள் உள்ளது. தாய் திட்டத்தின் கீழ் 8 ஏரிகளும், தனியார் பங்களிப்புடன் 4 ஏரிகளும் தூர் வாரப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் 12 ஏரிகளில் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தொடர்ந்து பேசிய அவர், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 33 குளம் குட்டைகள், தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 33 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளபட்டு வருகிறது. வருவாய்த் துறை, நிலஅளவை துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை சார்பாக ஏரிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.Body:

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது
பர்கூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பில் 165 ஏரிகள் உள்ளது. தாய் திட்டத்தின் கீழ்
8- ஏரிகளும், தனியார் பங்களிப்புடன் 4- ஏரிகளும் தூர் வாரப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது குடி
மராமத்து திட்டத்தின் கீழ் 12- ஏரிகள் தூர் வாரும் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
பாலிநாயனப்பள்ளி ஊராட்சிகுட்பட்ட அழகியபுதூர் ஏரி, பெலவர்த்தி, வரட்டணப்பள்ளி,
பெருகோபனப்பள்ளியில் லட்சுமனநாயக்கன் ஏரியும், காட்டரகம் ஊராட்சியில் சந்தூர் ஏரியும், குள்ளம்பட்டி
ஊராட்சியில் ஆதிதிராவிடர் குட்டை, லட்சுமி கவுண்டன் ஏரி, மாதிநாயக்கன்பட்டி ஏரி, கிட்டனூர்,
சிகரலப்பள்ளியில் கப்பல்வாடி ஏரி, வெப்பாலம்பட்டி ஊராட்சி தொப்பிடிகுப்பம் ஏரி, தொகரப்பள்ளி ஊராட்சி
பில்லகொட்டாய் ஏரி, அஞ்சூர் ஊராட்சி மோடிகுப்பம் ஏரி ஆகிய ஏரிகளில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில்
தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ச்சியாக பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 33- குளம்
குட்டைகள், தலா ரூ. 1 – லட்சம் வீதம் ரூ. 33 – லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளபட்டு
வருகிறது. வருவாய்த் துறை, நிலஅளவை துறை, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஏரிகளை அளவீடு
செய்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் ஏரியில் தூர் வாரும்
பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.