கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் துரிதகதியில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஓசூரில் உள்ள மத்திய அரசின் கரோனா ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண், ஊத்தங்கரையைச் சேர்ந்த 18 வயது ஆண் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சென்னையிலிருந்து சேலம் வந்த மணப்பெண்ணுக்கு கரோனா தொற்று!