கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ரோட்டரி கிளப் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது."குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மாரத்தான்" என்கிற தலைப்பில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் போட்டி ஓசூர் மாநகராட்சி சிறுவர் பூங்கா முதல் ரிங் ரோடு வழியாக அந்திவாடி விளையாட்டுத்திடல்வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த மாரத்தான் போட்டியில், 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டி ஒரு குழுவாகவும், 18 வயதிற்கும் அதிகமான இளைஞர்கள், பெரியவர்கள் என மற்றொரு குழுவாகவும் நடைபெற்றது.
மேலும், மாரத்தான் ஓட்ட போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட எம்பி செல்லக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் இரண்டு குழுக்களிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாயும், இரண்டு, மூன்று என முறையாக 3000, 1000 ரூபாய் என வழங்கப்பட்டது.
இந்த மினி மாரத்தான் போட்டியில் 1500த்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஓசூர் பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் 100% இல்லை என்கிற இலக்கிற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் - தட்டிக் கேட்ட பயணிக்கு அடி