இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பாரூர் பெரிய ஏரியின் இரு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து வரும் 14.12.2020 முதல் 12.04.2021ஆம் ஆண்டுவரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.