ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சிய சகோதரர்கள் கைது! - கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய சகோதரர்கள் கைது

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் மண்பானையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றுவந்த சகோதரர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்கள்
கைது செய்யப்பட்ட சகோதரர்கள்
author img

By

Published : Apr 27, 2020, 10:03 AM IST

Updated : Apr 27, 2020, 12:55 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்றுவருவதாக தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளருக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின்படி ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் ராயக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் மதுவிலக்கு தடுப்பு நடவடிக்கையாக சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு முத்துசாமியின் மகன்கள் கிருஷ்ணன், அய்யனார் ஆகிய சகோதரர்கள் அவர்களது ஆட்டுப்பட்டியில் மண்பானையில் சாராயம் காய்ச்சி புதைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.

பின்பு, அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல்செய்தனர். மேலும், 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சகோதரர்கள்

இதேபோல், ராயக்கோட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்றுவருவதாகக் கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு சுப்பிரமணி, அரிச்சந்திரன், பவுன்ராஜ் ஆகியோர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட சுப்பிரமணி
கைதுசெய்யப்பட்ட சுப்பிரமணி

பின்னர், காவல் துறையினரைக் கண்ட அவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர். அதில், சுப்பிரமணி என்பரைக் கைதுசெய்த காவல் துறையினர், மற்ற இருவரைத் தேடிவருகின்றனர். அவரிடமிருந்து இரண்டு லிட்டர் கள்ளச்சாராயத்தைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: வேலூரில் 500 லிட்டர் கள்ளச்சாராயம், 3000 லிட்டர் ஊறல் அழிப்பு

Last Updated : Apr 27, 2020, 12:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.