ETV Bharat / state

'பட்டியலினத்தவரை இழிவுபடுத்திய தயாநிதியை கைது செய்க!' - பாஜக மாநில செயலாளர் நரேந்திரன் கோரிக்கை

கிருஷ்ணகிரி: பட்டியலின மக்களை இழிவுபடுத்தும்வகையில் பேசிய தயாநிதி மாறனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும் என பாஜக மாநிலச் செயலாளர் நரேந்திரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் மனு அளித்த பாஜகவினர்
காவல் நிலையத்தில் மனு அளித்த பாஜகவினர்
author img

By

Published : May 16, 2020, 1:34 PM IST

இரண்டு தினங்களுக்கு முன்பாக தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “தலைமைச் செயலர் எங்களை மூன்றாம் தர மக்களைப்போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்று பட்டியலின சமூகத்தினரை இழிவுபடுத்தும்வகையில் பேசியிருந்தார்.

இது பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் தயாநிதி மாறனை கைதுசெய்யக்கோரி மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுவருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலையத்தில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பாஜக மாநிலச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் தயாநிதி மாறனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நரேந்திரன், “முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பட்டியலின சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சு அவர்களை அவ்வாறுதான் நடத்துகிறார்களா? என்கிற கேள்வி எழுப்புகிறது.

தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றுகூட தெரியாமல் பட்டியலின மக்களை இவ்வாறு இழிவுப்படுத்தி பேசியிருப்பது அச்சமூகத்தினரைக் கொதிப்படைய செய்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையிலேயே பட்டியலின சமூக மக்களை மதிப்பதாக இருந்தால், தயாநிதி மாறனை திமுகவிலிருந்து நீக்க வேண்டும். தயாநிதி மாறன் இதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் என்றுகூட பாராமல் பிச்சைக்காரர்கள் எனப் பேசியிருக்கிறார்.

இந்த வரிசையில் தற்போது பட்டியலின மக்களை இழிவுபடுத்தியிருப்பதால் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா?' - தயாநிதி மாறனின் கருத்துக்கு பாஜக கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.