ETV Bharat / state

வீடுகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மீது குற்றச்சாட்டு - வீடுகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல்

கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

corruption
corruption
author img

By

Published : Feb 17, 2021, 2:56 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் திமுகவை சேர்ந்த ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா, தளி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பிரகாஷ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரகாஷ் கூறியதாவது, ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தனிநபர் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட எந்த ஒதுக்கீடுகளையும் பின்பற்றாமல் அலுவலர்கள் இடைத்தரகர்கள் மூலம் முன்கூட்டியே சிலருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதனால் பலகோடி ரூபாய் முறைக்கேடு நடைபெற்றுள்ளது. எனவே தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவரின் ஒப்புதலுடன் மார்ச் 1ஆம் தேதி வீட்டுவசதி வாரியம் முன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

இதையும் படிங்க: செயற்பொறியாளர் மீது எடுத்த நடவடிக்கை: வீட்டு வசதி வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.