ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அங்கன்வாடி தின விழா...! - Krishnagiri Anganwadi Day Celebration

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் கீழ் அங்கன்வாடி தினம் சிறப்பாக நடைபெற்றது.

krishnagiri
author img

By

Published : Nov 22, 2019, 7:13 AM IST

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சைல்டு லைன் ஊரக சமுதாய மேம்பாட்டு திட்டம் சார்பாக அங்கன்வாடி தினவிழா நடைபெற்றது.

இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடங்கிவைத்தார். பின்னர் ஊட்டச்சத்து, சிறுதானிய உணவு கண்காட்சியை அவர் பார்வையிட்டார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் விழாவில் பேசுகையில், ”அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கும், மழலைகளுக்கும் ஏற்படுகின்ற உடல் உபாதைகளை கண்டுபிடித்து அவர்களை நல்ல முறையில் பராமரித்து வருகிறீர்கள்.

krishnagiri
சிறுதானிய உணவு கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

அரசின் மற்ற துறை பணிகளான கணக்கெடுப்பு, புள்ளி விவரங்கள், வாக்காளர் சரிபார்க்கும் பணி, தேர்தல் பணிகள் என கூடுதலாக பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள். அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி மின்விளக்கு, மின்விசிறி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளை தங்கு தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக அடிப்படை வசதிகள், வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் குறித்து கோரிக்கை வந்தாலும் உடனடியாக புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க: அங்கன்வாடி மையம் அருகே பராமரிப்பற்றுக் கிடக்கும் கிணறு - மூட மக்கள் கோரிக்கை!

Intro:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் கீழ் அங்கன்வாடி தினம் மாவட்ட ஆட்சியர் தலைமை
Body:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் கீழ் அங்கன்வாடி தினம் மாவட்ட ஆட்சியர் தலைமை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சைல்டு லைன் ஊரக சமுதாய மேம்பாட்டு திட்டம் சார்பாக அங்கன்வாடி தின விழாவை மாவட்ட மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து ஊட்டசத்து மற்றும் சிறுதானிய உணவு
கண்காட்சியை பார்வையிட்டார். மாவட்ட மாவட்ட ஆட்சியர் பேசும்பொழுது:
அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் அங்கன்வாடி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கும், மழலை செல்வங்களுக்கும் ஏற்படுகின்ற உடல் உபாதைகளை கண்டுபிடித்து அவர்களை நல்ல முறையில் பராமரித்து வருகிறீர்கள். அரசின் பிறதுறை பணிகளான கணக்கெடுப்பு, புள்ளி விவரங்கள், வாக்காளர் சரிபார்க்கும் பணி, தேர்தல் பணிகள் என கூடுதலாக பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள். இவ்வாறு பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவுரையின்படி மின் விளக்கு, மின் விசிறி (பேன்), கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளை தங்கு தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அடிப்படை வசதிகள், வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் குறித்து கோரிக்கை வந்தாலும் உடனடியாக புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.