ETV Bharat / state

’விடுதலையாகும் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு காத்திருக்கிறது’ - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் - சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

கிருஷ்ணகிரி: சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமமுக தொண்டர்க காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

ex minister palaniappan on sasikala
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
author img

By

Published : Jan 13, 2021, 2:09 PM IST

ஓசூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். அவரது வருகை மக்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்’ என்றார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

தொடர்ந்து சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஓசூரில் தங்குவதாக செய்திகள் வெளியாகியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பழனியப்பன், அவர் இங்கு தங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

இதையும் படிங்க:பாழடைந்த ரேஷன் கடை: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.