ETV Bharat / state

பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணமா? - கிருஷ்ணகிரி பகீர் சம்பவம்!

தேன்கனிக்கோட்டையில் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharatபிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம் - கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

author img

By

Published : Nov 27, 2022, 1:30 PM IST

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரது மகன் அருண்குமார் (24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (நவ.26) மதியம் அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நெஞ்சு வழிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட நண்பர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞரின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் 10 சவரன் நகை கொள்ளை: சிசிடிவி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.