ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை உரிமையாளர் தற்கொலை.. நடந்தது என்ன? - நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

Krishnagiri businessman Suicide:கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை உரிமையாளர், தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 6:57 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி எனும் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன், உரிமையாளராக டி.எம்.சுரேஷ் இருந்து வருகிறார். இவரை போன்று இவரது சகோதரர்களும் பல நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் நடத்தி வருகின்றனர். டி.எம்.சுரேஷ், கிருஷ்ணகிரி நகர வணிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி காந்திநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று காலை 7 மணியளவில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறை மற்றும் தடயவியல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் வருகை புரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் சுரேஷ் தற்கொலை குறித்து காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், அவருக்கு சமீபகாலமாக நிலம் முதலீடு மற்றும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை என்கவுண்டர்; ஆர்டிஓ முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.