கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திர கணேஷ், ஜீவா, ரமேஷ். இவர்கள் மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர்.
மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததோடு அதனைக் காணொலியாகவும் பதிவு செய்துகொண்டு மாணவியை அச்சுறுத்திவந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் காணொலியைக் காட்டி மிரட்டி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதற்கு வலுக்கட்டாயமாக முயற்சித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து சந்திர கணேஷ், ஜீவா, ரமேஷ் ஆகிய மூவரையும் கைதுசெய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது - கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.