கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசனட்டி குடியிருப்புப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சிப்காட் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவயிடத்துக்குச் சென்ற காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி வளைத்தனர்.
இதில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த14 பேரை கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர்களைச் சொந்த பிணையில் விடுவித்தனர்.