கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தளி அருகே உள்ள நாற்றம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட சில பகுதிகளில் மத்திய அரசால் கிராமப்புறப் பகுதிகளில் செயல்பட்டுவரும் 100 நாட்கள் வேலைத்திட்டம் கிராமப்புற மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
மேலும் கிராமப்புறங்களில் நீர் குட்டை அமைப்பது, மழைநீர் சேமிப்பு போன்ற சில திட்டங்களை 100 நாள்கள் வேலை பார்க்கும் கிராமப்புற மக்களை வைத்துக் கொண்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வந்தனர்.
நாற்றம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட கேரட்டி, பாரதிநகர், சிவலிங்கபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 100 நாள்கள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் நபர்களுக்கு ஆண்டுக்கு 30 முதல் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி நாற்றம்பாளையத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த இடைவெளி கடைபிடித்து கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பட்டம் செய்தனர்.