கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன். தற்போது அமெரிக்காவில் உள்ள மிசோரி மாநகரத்தில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிந்துவரும் இவர் அங்கிருந்தவாறே தனது கிராமத்தின் வளர்ச்சிக்கு அவ்வப்போது சில நலத்திட்ட உதவிகளை தன் தந்தையின் மூலமாகச் செய்துவருவார்.
இந்நிலையில் தற்போது பெய்த பருவ மழையால் இவர் வசித்த கிராமமும் செழிப்படைந்துள்ளதால் மரக்கன்றுகள் நடலாம் என்று கூறியுள்ளார். அதன்படி நரேந்திரனின் தந்தை கந்தசாமி நடத்திய மரம் நடும் விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் இயக்கச் செயலாளரும் சார்பு நீதிபதியுமான மோகன்ராம் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நரேந்திரனுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், மரம் நடுவதற்கான அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
ஆரணியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி; மாவட்ட ஆட்சியர் தொடக்கம்!