கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தம். பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு பெயிண்ட் அடிப்பது, மணல் விற்பது உள்ளிட்ட வேலைகள் செய்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இவர் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அடிக்கடி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக சதானந்தம் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று இரவு அமராவதி ஆற்றங்கரையில் அமர்ந்து குளிர் பானத்தில் எறும்பு மருந்தை கலந்து குடித்தார். இது தொடர்பான வீடியோவை லைவ்-ஆக ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார்.
அந்த வீடியோவில் தன்னுடைய சாவிற்கு காரணம் பசுபதிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தான். அவர் என்மீது பொய் வழக்கைப் பதிவு செய்வதால் தற்கொலை செய்துகொள்கிறேன் எனப் பேசினார்.
இதனையடுத்து அந்தப்பகுதி மக்கள் சதானந்தத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். தற்போது அவர் அபாயக் கட்டத்தை கடந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக பசுபதிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முறையில்லா காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தற்கொலை!