கரூர் மாவட்டம் கோடங்கிபட்டி அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேருந்தில் இலவச பயணம் மேற்கொண்ட பெண் பயணியை நடத்துனர் அவதூறாக பேசும் வீடியோ வைரலானது . இதை தொடர்ந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, தவிட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது பெண் ஒருவர் இறங்குவதற்குள் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் தடுமாறியுள்ளார். இதையடுத்து பேருந்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் இலவச பயணம் மேற்கொண்டால் இப்படி தான் இறக்கி விடுவீர்களா என ஆவேசமாக பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அரசு பேருந்துகளில் தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் அரங்கேறுவது சர்ச்சையாகி உள்ளது.
இதையும் படிங்க: கடன் கேட்டு மிரட்டியதால் தற்கொலை; ஒருவர் கைது