ETV Bharat / state

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வந்தது: பொதுமக்கள் வரவேற்பு - கரூர்

கரூர்: கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கனமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் மாயனூர் கதவணைக்கு வந்த காவிரி நீரை பொதுமக்கள், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.

mayanur dam
author img

By

Published : Aug 18, 2019, 9:50 AM IST

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. இன்னும் சில நாட்களில் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தார்.

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வந்தது

அதையடுத்து, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வந்தடைந்தது. 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீர் காலை 11 மணிக்கு கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர். இந்த தண்ணீர் இன்று திருச்சி மாவட்டம் கொள்ளிடம் முக்கொம்புவுக்கு போய் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:கரூர் மாயனூர் கதவணை தண்ணீர் வரத்து அதிகரிப்பு.Body:
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

இன்று கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வந்தடைந்தது

10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அந்த தண்ணீர் காலை 11 மணிக்கு கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது.

இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர்.

இந்த தண்ணீர் இன்று இரவு திருச்சி மாவட்டம் கொள்ளிடம் முக்கொம்புவுக்கு போய் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.