ETV Bharat / state

‘வெள்ள பாதிப்பு பகுதிகளில் தடையில்லா மின்சாரம் விநியோகம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி - மின்சாரம் விநியோகம்

தமிழ்நாட்டில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat நிவாரணம் வழங்கிய அமைச்சர்
Etv Bharat நிவாரணம் வழங்கிய அமைச்சர்
author img

By

Published : Aug 6, 2022, 5:24 PM IST

கரூர்: காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோர பகுதிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஆக. 6) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.

முன்னதாக, குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திம்மாச்சிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாயனூர் கதவணையை பார்வையிட்டார். தொடர்ந்து கரூர் வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியை பார்வையிட்டு முகாம்களில் தங்கியுள்ள 250-க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதன் ஒருபகுதியாக, நஞ்சை புகலூர் ஊராட்சி தவுட்டுப்பாளையம் பகுதியில் 79 குடும்பங்கள் மூன்று குழந்தைகள் உள்பட 232 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஆக. 05) மரங்கள் சாய்ந்து 5ஆயிரம் மின் இணைப்புகள் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதனை சீர் செய்து மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் வெள்ளப் பாதிப்புகளால் மின்தடை இல்லை, சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

மேலும், தவுட்டுப்பாளையம் பொதுமக்களுக்கு காவிரி ஆற்றில் ஓரமாக தடுப்புச் சுவர் அமைப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் பணிகள் முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின்படி நடைபெறவுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’மகளிர் இலவச பேருந்து’- பெண்கள் எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.