ETV Bharat / state

சுமார் 420 பெண்களுக்கு பேருந்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர் - பெண்களுக்கு பேருந்து ஓட்டுநர் உரிமம்

கரூரில் சுமார் 420 பெண்களுக்கு பேருந்து ஓட்டுநர் உரிமத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று வழங்கினார்.

transport minister m r vijayabaskar
420 பெண்களுக்கு பேருந்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர்
author img

By

Published : Nov 9, 2020, 6:33 PM IST

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சுமார் 420 பெண்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து உரிமம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட அதிமுக அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன் ஏற்பாடு செய்தார். நிகழ்வில் பேசிய அமைச்சர், " மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது முதல் தற்போதுவரை அதிமுக அரசு தொடர்ந்து பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

கரூர் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதில் இருக்கக்கூடிய சிக்கலை அறிந்து 420 பெண்களுக்கு தற்போது ஓட்டுநர் உரிமம் முறையான பயிற்சிக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி பயணிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்? - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.