ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவரும் 27 ஐபிஎஸ் அலுவலர்கள் பதவி உயர்வு, பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் திருப்பூர் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராகப் பணியிடை மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் காவலர் நலன், சட்டம் ஒழுங்கு, கரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல திருப்பூர் மாநகரக் காவல் உதவி ஆணையராக இருந்த சுந்தர வடிவேல் பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்கவுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடர்ந்து கணிசமாகக் குறையும் கரோனா!