ETV Bharat / state

கரோனா நெருக்கடியில் தலைவிரித்தாடும் வாடகை பிரச்னை: அரங்கேறும் வன்முறைகளுக்கு தீர்வுதான் என்ன? - ஊரடங்கில் தலைத்தூக்கும் வாடகைதாரர்கள் -வீட்டு உரிமையாளர்கள் பிரச்னை: தீர்வுதான் என்ன?

'வாடகை கொடுக்கவில்லை’ என குற்றஞ்சாட்டி, வீட்டைப் பூட்டிவிட்டு உரிமையாளர் சாவியை எடுத்துச் சென்ற சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது. வாடகை கேட்டார் என்பதற்காக உரிமையாளரை வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் சென்னை குன்றத்தூரில் அரங்கேறியுள்ளது. ஏன் இந்த வன்மம்? இவை அனைத்துக்கும் பொருளாதார நெருக்கடி என்ற ஒற்றைப் புள்ளிதான் மையமாக இருக்கிறது...

ஊரடங்கில் தலைத்தூக்கும் வாடகைதாரர்கள் -வீட்டு உரிமையாளர்கள் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?

author img

By

Published : Jul 18, 2020, 12:56 PM IST

ஒவ்வொரு மாத வருமானத்திலும் வீட்டு வாடகைக்கு என ஒரு தொகையை எடுத்துவைக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்தியாவில் பெரும்பான்மை. இவர்களின் ‘பட்ஜெட்’ வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படி கையிருப்பும் மிஞ்சியதில்லை, இதனாலேயே சொந்த வீடு வாங்குவது அவர்களின் கனவுகளில் மட்டுமே சாத்தியப்பட்டுவருகிறது.

இந்த நெருக்கடி நிலையைப் புரிந்துகொண்ட தமிழ்நாடு அரசு, ”ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வாடகை கேட்கக்கூடாது” என அறிவுறுத்தியது. ஆயினும் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வாடகை கேட்பதை வீட்டு உரிமையாளர்கள் நிறுத்தியதாகத் தெரியவில்லை.

'வாடகை கொடுக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டி, வீட்டைப் பூட்டிவிட்டு உரிமையாளர் சாவியை எடுத்துச் சென்ற சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது. வாடகை கேட்டார் என்பதற்காக உரிமையாளரை வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞர் கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் சென்னை குன்றத்தூரில் அரங்கேறியுள்ளது. ஏன் இந்த வன்மம்? இவை அனைத்திற்கும் பொருளாதார நெருக்கடி என்ற ஒற்றைப் புள்ளிதான் மையமாக இருக்கிறது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ், லோகஷ்வரி தம்பதியினர் கரோனா ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்று காலதாமதமாக வீடு திரும்பியுள்ளனர். ஆனால் வருவதற்குள் வீட்டை இரண்டு பூட்டுகளால் பூட்டிவிட்டார், உரிமையாளர். என்ன நடந்தது அவர்களிடமே கேட்டோம். லோகேஷ்வரி கூறுகையில், “வீட்டு வாடகை 35 ஆயிரம் ரூபாய் கட்டினால் சாவியைக் கொடுக்கிறேன் என உரிமையாளர் கூறிவிட்டார். வேலையில்லாத இந்த நேரத்தில் அவ்வளவு பணத்திற்கு எங்கு செல்வோம். இப்போதைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து தங்கியிருக்கிறோம். மேலும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிட்டார். வேறு வீடு தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

பெருநகரங்களில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் நிலையும் இப்போது மோசமடைந்துள்ளது. திருப்பூர் மாநகர் பகுதிகளில் மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்துவந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மாநகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைசெய்துவந்தனர். ஒருசில நிறுவனங்களில் மட்டுமே வெளிமாநிலத்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கும் வேலையில்லாமல் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தங்கியிருந்தவர்களுக்கும் வாடகை பிரச்னை பெரும் தொந்தரவாக மாறியது.

“எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை என்று கூறிவிட்டோம். ஆனால், எனது வீட்டு உரிமையாளர், ‘என்னுடைய மருத்துவச் செலவுக்கு நான் என்ன செய்வேன்’ என நச்சரித்துக்கொண்டே இருந்தார். வேலையும் சரியாக இல்லை, சிரமப்பட்டுத்தான் வாடகை கொடுத்தேன். அரசுதான் எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்” என்கிறார், வெளிமாநில தொழிலாளர் மினி.

பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மேற்கொள்ளும் வீட்டு உரிமையாளர்களுக்கு, வாடகையில் விலக்கு அளிப்பது நெருக்கடியை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் வீட்டு உரிமையாளர் ஜெயபால். அவர் கூறுகையில், “தற்போதைய சூழலில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதனால் மாநகர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் காலியாக உள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்களும் வாடகை பணமின்றி தவித்துவருகிறோம். மேலும் வீடு பராமரிப்பு வரி உள்ளிட்ட செலவுகளைச் செய்துதான் வருகிறோம்.

ஊரடங்கில் தலைதூக்கியிருக்கும் வாடகைதாரர்கள் - வீட்டு உரிமையாளர்கள் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?

இப்படிப்பட்ட சூழலில் தற்போது வாடகைக்கு வீடு கேட்டு வருகிறவர்கள் மிகவும் குறைந்த தொகைக்குக் கேட்டு வருகிறார்கள். முன்பணம்கூட குறைவாகத்தான் வழங்குகிறார்கள். தொழிலாளர்களின் நிலை எங்களுக்குப் புரிகிறது. இருப்பினும், எங்களது நிலையையும் அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். நியாயமான வாடகை தான் வசூலித்து வருகிறோம். தொழிலாளர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்” என ஆதங்கப்படுகிறார்.

சென்னையில் விடுதியில் தங்கி வேலை பார்க்கும் பெண் ஒருவரிடம் வாடகை விவரம் குறித்துக் கேட்டபோது, “நான் ஊரடங்கு அறிவித்ததும் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிவிட்டன. எனது விடுதியிலிருந்து என்னை அழைத்து வாடகையைச் செலுத்துமாறு கூறுகிறார்கள். ஒரு மாதத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்த வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் உடனே வந்து உடமைகளை எடுக்க வேண்டும்; அதுவும் வாடகையைச் செலுத்திவிட்டுத்தான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இப்போது எனக்கு ஊதியத் தொகையும் இல்லை” என புலம்பிக் கொட்டுகிறார்.

வாடகைதாரருக்கு வாழ்வாதாரம் பிரச்னை இருப்பது போலவே, வீட்டு உரிமையாளர்களுக்கும் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும், ஒரு மாத வாடகையே கொடுக்கமுடியாத சூழலில் இருக்கும் வாடகைதாரர்களிடம் வாடகையில் முழுத்தொகையைக் கேட்பதும் அறமல்லவே.

கரோனா நெருக்கடி முடியும் வரையில் வாடகைதாரர்களும், வீட்டு உரிமையாளர்களும் ஒருமித்த புரிதலில், சில விட்டுக்கொடுத்தல்களைப் பின்பற்றினால்தான் வரும் காலங்களில் இதுதொடர்பாக அரங்கேறும் வன்முறைகள் குறையும். அரசு இந்த இக்கட்டான சூழலில் மௌனம் காக்காமல் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!

இதையும் படிங்க...’இவங்கதான் என் குடும்பம்; இவங்களே எனக்குப் போதும்’- கரோனாவால் கைவிடப்பட்ட விலங்குகளை அரவணைக்கும் சுனிதா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.