கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நேற்று (நவ.03) கரூர் ஆண்டாங்கோவில் அமராவதி தடுப்பணை மற்றும் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், புகழூர் புகழிமலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்த குழுவினர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் அளவு குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து புகளூர் நகராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு செய்தனர். சிறிய மலை உச்சியில் இருக்கும் இந்த புகழிமலை பாலசுப்ரமணியன் சுவாமி கோயிலுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலை வசதி அமைக்க முடியுமா என்று அங்குள்ள அதிகாரிகளுடன் கேட்டு அறிந்தனர். இறுதியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் , குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்) , தி.வேல்முருகன் (பண்ருட்டி), கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், கரூர் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை) , ஆர். இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம், கரூர் மாநகராட்சி மேயர் க.கவிதா கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க;மக்கள் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்படவில்லை: அமைச்சர் நாசர்