கரூர் மாவட்டம் தம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் சாமியப்பன்-பொம்மாயி தம்பதி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாமியப்பன் விபத்திலும், பொம்மாயி உடல் நலக்குறைவாலும் உயிரிழந்தனர்.
இவர்களுக்கு கோகிலா, சர்மிளா, அகிலா என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் பாட்டியின் அரவணைப்பில் உள்ளனர்.
கோகிலாவுக்கு சக்கரக்கோட்டையச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இருப்பினும் திருமண செலவுகளை சமாளிக்க முடியாத சூழலில் கோகிலா இருந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர்கள் புதுப்பெண்ணான கோகிலாவிற்கு பட்டுப்புடவை, தங்கத்தில் தாலி, சீர்வரிசை என அனைத்தும் வாங்கி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். தற்போது இந்த சமூக ஆர்வலர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மும்மத சாட்சியாக நல்லிணக்க திருமணம்!