ETV Bharat / state

'சீமான் ஒரு பாலியல் அரசியல்வாதி... அப்பாவி ஈழத்தமிழ் மக்களை சுரண்டி வாழ்பவர்' - போட்டு தாக்கிய ஜோதிமணி! - MP Jothiani

சீமான் தன்னை ஒரு பெண் எம்.பி., என்று கூட பாராமல், பொதுவெளியில் வக்கிரமாக ஆபாசமாகப் பேசி வருகிறார் என்றும்; இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

சீமான் ஒரு பாலியல் அரசியல்வாதி- எம்பி ஜோதிமணி கடும் தாக்கு

author img

By

Published : May 24, 2022, 8:15 PM IST

கரூர்: காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி இன்று அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், 'நவீன இந்தியாவின் தந்தையாகவும் பஞ்சாயத்துராஜ் எனும் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்கிய முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில் குறித்து சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தேன். அதற்கு நேர்மையாகப் பதிலளிக்க முடியாத சீமான், தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் எண்ணத்தில் ஆபாசமாகவும் வக்கிரமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சீமான் மீது தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டை நான் கூறவில்லை. பொதுவெளியில் ஆதாரத்துடன் கூறி விஜயலட்சுமி, (பாதிக்கப்பட்ட பெண்) காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். அவர் அளித்தப்புகாரில் உண்மை இல்லை என்றால் சீமான் மான நஷ்டஈடு வழக்கு நீதிமன்றத்தில் ஏன் தொடுக்கவில்லை.

சகோதரி என்று பேசியபடியே வக்கிரமாக நடந்த சீமான்: இதே புகாரை பல ஆண் தலைவர்கள் தெரிவித்தபோது, பதிலளிக்காத சீமான், ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூட பாராமல் அவர் கூறிய கருத்துகளில் அவருடைய தகுதி என்ன என்பது வெளிப்பட்டு விட்டது. சீமான் அளித்த பேட்டியில் சகோதரி என்று என்னை கூறிவிட்டு, ஆபாசமாகவும் வக்கிரமாகவும் பேசியதில் அவரது உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. அரசியலில் உள்ள பெண்கள் மீது அவதூறு பரப்புவது ஆபாச தாக்குதல் நடத்துவது, அருவருக்கத்தக்க வகையில் பேசுவதால் பெண்கள் அரசியலை விட்டு ஓடிவிடுவார்கள், என நினைக்கிறார் சீமான்.

சீமான் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோர வேண்டும்: கரூர் மக்களவையில் தனக்கு வாக்களித்தவர்கள் மானங்கெட்டு வாக்களித்தார்கள் என தரம் தாழ்ந்த விமர்சனத்தை சீமான் வைத்துள்ளார். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கரூர் மக்களவை வாக்காளர்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோர வேண்டும்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் எனவும், கரூரில் உள்ள எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த தனக்கு 25 ஆண்டுகால அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத போராட்டவாதியாக நேர்மையாக மக்கள் பணியாற்றிட மக்களவை உறுப்பினராக கரூர் மக்கள் வாய்ப்பு அளித்தார்கள்.

கரூர் மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நேர்மையாக உழைத்து வாழ்பவர்கள். சீமானை போல இலங்கை தமிழர்களையும் அப்பாவித் தமிழ் மக்களையும் சுரண்டி ஆடம்பரமாக வாழ்பவர்கள் அல்ல. எனவே, கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்காளர்களைப் பற்றி பேச சீமானுக்கு எந்த அருகதையும் இல்லை. எனவே சீமான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றார்.

சீமான் நீதிமன்றத்தில் பாலியல் குற்றவாளி என அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைப்பது சரியா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'பாரதிய ஜனதா கட்சியின் B teamஆக செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி சீமான். பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகர் ராகவன் மீது பாலியல் புகார் எழுந்தபோது ஆண்களில் யாரும் செய்யாத தவற்றை ராகவன் செய்யவில்லை என்று விளக்கம் கூறி பாஜகவுக்கு ஆதரவாக இருந்த சீமான், தமிழ்நாட்டில் உள்ள நான்கு கோடி பெண்கள் குறித்து கவலை கொள்ளாமல் பொதுவெளியில் இதுபோன்று வக்கிரமாக பேசுவது எந்த வகையில் நியாயம் .

எம்பி ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பு

சீமான் ஒரு பாலியல் அரசியல்வாதி: சீமானுடைய வார்த்தைகள் அவர் ஒரு பாலியல் அரசியல்வாதி என்பதைக் காட்டுகிறது . நாம் தமிழர் கட்சியிலும் பெண் தங்கைகள், தம்பிகள் கருத்து முரண்பாடுடன் பயணித்து வருகிறார்கள். அவர்களை சீமான் தவறாக வழிநடத்தி விடக்கூடாது என்பதற்காகவும் தொடர்ந்து சீமானுடைய முகத்தை தோலுரிக்கும் பணியினை மேற்கொள்ள உள்ளேன்’எனத்தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் மெய்ஞான மூர்த்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தென்காசி காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'என் மீது பாலியல் புகார் கூறுவதா?' - சீமான் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.