ETV Bharat / state

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு - சீமானின் பதில் என்ன?

Seeman about Actress Vijayalakshmi Complaint: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுக்கு காரணம், பாஜகவின் கூட்டணியில் அதிமுக நீடிக்கும் நிலையில், கடந்த ஆட்சியில் நடந்த தவறுக்கு பழிவாங்கும் நடவடிக்கையே என்றும் காங்கிரஸை விட்டு திமுக விலகுமானால், திமுகவிற்காக தேர்தல் பிரசாரம் செய்ய தயார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு
Seeman about Actress Vijayalakshmi Complaint
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 8:24 PM IST

Updated : Aug 29, 2023, 9:39 PM IST

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு - சீமானின் பதில் என்ன?

கரூர்: நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் அளித்த பதில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (ஆக.29) கரூர் மாவட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென 'INDIA' கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருவது குறித்து கேட்டதற்கு, நீட் தேர்வை இந்தியாவில் முதன் முதலில் கொண்டு வந்த கட்சியே 'INDIA' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் என்றார்.

கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் 'நீட் தேர்வு அவசியம்' என கூறியது சமூக வலைதளங்களில் இன்றும் காண முடிவதாகவும், நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் வாதிட்டு வென்ற நளினி சிதம்பரம் யார் என்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு நாடக நடிகர் நல்ல, கதை வசனம் எழுதக்கூடியவர். எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவார் என்று கூறிய அவர், இதேபோல இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்றும், அப்போது முதலமைச்சராக பதவி வகித்த கட்சி எந்த கட்சி என்றும் கேள்வியெழுப்பினார்.

காங்கிரஸை திமுக தூக்கி எறியுமா?: மேலும் இது குறித்து பேசிய அவர், 'ஒரு மாநில கட்சி, இந்தியாவில் அமைச்சரவையில் 18 ஆண்டுகள் ஒரே கட்சி திமுகதான். வாஜ்பாய், விபி சிங், மன்மோகன் சிங் வரை திமுக அங்கம் வகிக்காத அமைச்சரவையே கிடையாது. கச்சத்தீவு பிரச்னையை அப்பொழுதெல்லாம் தீர்க்க முடியாத திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு காவிரி நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு மீட்பு பிரச்னை, நீட் தேர்வு ஒழிப்பு ஆகியவற்றை பேசி வருகிறது. காங்கிரஸை தூக்கி எறிந்துவிட்டு திமுக வந்தால் அரசியல் ரீதியான போராட்டக்களத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி விலகிக் கொள்ள தயாராக இருக்கிறது.

திமுக வெற்றிக்கு பாடுபட தயார், ஆனால் ஒரு கண்டிஷன்: இந்த மாதிரி சூழ்நிலையில் ஜெயலலிதா தமிழக அரசியலில் இருந்தால், நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறி இருப்பார் என்றும், அவர் ஒரு சிறந்த தலைவர் எனவும் கூறினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிலிருந்து இப்பொழுதே விலகிக் கொள்கிறது என அறிவிக்கத் தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை விட்டு ,திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். நாம் தமிழர் கட்சி தொகுதி பங்கீடு பெறாமல், திமுக வெற்றி பெற வாக்கு சேகரிக்கத் தயாராக உள்ளது.

  • நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 28-08-2023 அன்று கரூரில் நடைபெற்ற கரூர் மாவட்டத்திற்குட்பட்ட #அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது, pic.twitter.com/Tg3Y0Dms68

    — செந்தமிழன் சீமான் (@Seeman4TN) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இஸ்லாமியர்களை பாஜகவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் திமுக விடுதலை செய்யுமாயின், திமுகவிற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்றும், இதற்காக தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொள்ளவும் தயார் எனவும் தெரிவித்தார். திமுகவிற்காக நாடும் மக்களும்தான் முக்கியம் என விளக்கி ஓட்டு கேட்பேன் என்றும் கூறினார். இஸ்லாமிய சிறைக் கைதிகளை 30 ஆண்டாக சிறையில் வைத்துதான் திமுக பாதுகாப்பு அளிப்பதாகவும், இந்த நிலையில் திமுகவை எதிர்த்து பேசினால் சங்கிகள் என்று விமர்சிப்பதாகவும் சீமான் கூறினார்.

விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கு சீமான் அளித்த பதில்: நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து புகார்கள் அளித்து உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆமாம். தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார் என்றும், தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வரட்டும், அவ்வளவுதான். இதில் வேறொன்றும் இல்லை. என்றும் சீமான் பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, தனியாக திமுக-அதிமுகவை எதிர்த்து போராடுவதால் தனக்கு விஜய் துணைக்கு வருவதாகவும், இதை வரவேற்பதாகவும் பதிலளித்தார். இதனிடையே, கமல்ஹாசன் நடத்தி வரும் கட்சியில் கடைசி வரையும் அவரிடம் தெளிவில்லை. ஆகவே, அவர் திராவிடரா, தமிழரா என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்திற்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் நட்பு இருக்கலாம்: ரஜினிகாந்த், உபி முதல்வர் காலில் விழுந்து வணங்கியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதே ரஜினிகாந்த் தன்னைவிட வயதில் இளம் வயது கொண்ட இயக்குநர் நெல்சன் வருகை தந்தபோது எழுந்து நின்று வணங்கினார். ஒரு தலைமுறைக்கு பாடம் புகட்டும் வகையில் திறமை உள்ளவர்களை ரஜினிகாந்த் மரியாதை அளிக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும்.

இந்தப் பெருமையை யாரும் பேசுவதில்லை. ரஜினி காலில் விழுந்தது சமூக குற்றமல்ல. தன்னைவிட உயர்ந்தவர்கள் படித்தவர்கள், ஞானிகளை வணங்குவதில் தவறில்லை. உத்திரப்பிரதேச முதலமைச்சருக்கும், ரஜினிக்கும் முதலமைச்சராகும் முன்பே நட்பு இருந்திருக்கலாம். ரஜினியுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என அனைவரும் விரும்புவது இயல்பான ஒன்றுதான். ரஜினி மதிக்கத்தக்க மகத்தான நடிகர்.

பாஜகவின் பழிவாங்கும் செயல்: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், 'கரூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் சிறையில் இருப்பது தனக்கு வருத்தம் அளிக்கிறது. வேலை வாங்கித் தருவதாக மோசடி என அமலாக்கத்துறை கூறுகிறது. ஆனால், எந்த ஆட்சி காலத்தில் இந்த மோசடி நடைபெற்றது, அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான்.

இவ்வளவு காலம் அமலாக்கத்துறை ஏன் பொறுமையாக இருந்தது? தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதும், தேவையில்லாதபோது பழிவாங்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறையை வைத்து செந்தில் பாலாஜியை கைது செய்வது. இதுதான் நேர்மையான நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது.

நடுநிலை தவறும் மத்திய அரசு: அதிமுகவைச் சேர்ந்த ஆறு முன்னாள் அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்கு உள்ளது. அதுவும் ஊழல் வழக்கு. ஏன் இன்னும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை? ஏனென்றால், அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளது. அப்படி என்றால் சிபிஐ நேர்மையாக செயல்படவில்லை. மத்திய அரசும் நேர்மையாக செயல்படவில்லை என்பதை இது காட்டுகிறது' என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கரூர் காந்திகிராமம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற 'கல்வி மானுட உரிமை' என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'சமச்சீர் ஆனா பாட கல்வி முறை உள்ளது ஆனால் சமச்சீரான பாடம் இல்லை. ஏனென்றால், கிராமம் முதல் நகரம் வரை 'ஒரே கல்வி முறை' இல்லை, ஒரே மாதிரியான ஆசிரியர்களும் இல்லை, அனைத்து தரப்பு மக்களுக்கும் சமச்சீரான கல்வி என்பதுதான் ஜனநாயகத்தில் சரியான கல்வியும் அதுதான்' என்றார்.

இதையும் படிங்க: ‘நான்தான் சீமானின் மனைவி’.. செய்தியாளர்களிடம் நடிகை விஜயலட்சுமி ஆவேசம்!

Last Updated : Aug 29, 2023, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.