கரூர் மாவட்டம் அண்ணா நகர் தெற்கு காந்தி கிராமப் பகுதியில் வசித்துவருபவர் நாராயணன். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மகன் பிரணவ் சாய், மகள் உள்ளனர். இவரது மகன் பிரணவ் சாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.
பள்ளி விடுமுறையான நேற்று பிரணவ் சாய் நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் எதிரே வந்த வாகனத்தால் பேருந்தை முந்திச் செல்லும்பொழுது பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவன் பிரணவ் சாயின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பைக் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு