கரூர்: நெரூர் தென்பாகம் கிராமத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமாக மூன்று தலைமுறையாக பயன்பாட்டிலுள்ள சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவரும் தனி நபர்களிடம் இருந்து பாதையை மீட்டுத்தரக் கோரி நேற்று இரவு (ஆக.15) சுடுகாட்டில் குடியேறி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற அலுவலர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த வேலுசாமி (43) என்ற நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய சாதனையாளர் ஸ்டாலின்! - வைகோ