ETV Bharat / state

கரூரில் 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகள்! - சிறு பாசன குளங்கள்

கரூர்: தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற குளங்கள் தூர்வாரும் பணியை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூர் வாரும் பணியை பார்வையிட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன்
author img

By

Published : Sep 26, 2019, 7:55 AM IST

தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தாந்தோணி, கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணியை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணியை பார்வையிட்ட ஆட்சியர் அன்பழகன்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, "கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் முகமை சார்பிலும் பொதுப்பணித் துறை சார்பிலும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணிகள் பொதுப்பணித் துறையின் சார்பில் 33 பணிகள், ரூபாய் ஆறு கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 67 சிறு பாசன குளங்கள், மூன்று கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 365 குளங்களையும் ஊரணிகளையும் மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ரூபாய் மூன்று கோடிய 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 84 பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகக் கூறினார்.

மேலும், தற்போது பெய்துவரும் மழையால் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட குளங்களில் தொடர் மழையால் நீர் நிரம்பிவருகிறது. இது அப்பகுதி பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா உள்பட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : குளத்தைத் தூர்வாரிய காவலர்கள்; பொதுமக்களிடையே குவியும் பாராட்டுகள்!

Intro:குடிமராமத்து பணிகள் பருவ மழைக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது - கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேட்டி

Body:தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தாந்தோணி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள குளங்கள் தூர் வாரும் பணியை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவரின் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் முகாமை சார்பிலும் பொதுப்பணித் துறை சார்பிலும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்ற இதில் பொதுப்பணித் துறையின் சார்பில் 33 பணிகள் ரூபாய் 6 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று முடிந்துள்ளது மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முகாமில் சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும் உள்ள குளம் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மொத்தம் உள்ள 67 சிறு பாசன குளங்கள் 335 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன மேலும் 365 குளங்கள் மற்றும் ஊரணிகள் மேம்பாட்டு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ரூபாய் 367 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதில் 84 பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தற்போது பருவமழை காலம் என்பதால் குடி மராமத்து பணிகள் மேற்கொண்டு அதன் வாயிலாக பெரும்பாலான தொடர் மழையால் நீர் நிரம்பி வருகிறது இது அப்பகுதி பொதுமக்கள் இடையிலும் விவசாய பெருங்குடி மக்களின் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா உட்பட பலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.