ETV Bharat / state

‘ஸ்டாலின் டீ கடைகளுக்கு செல்லலாம், நான் ‘டீ’ கடையே நடத்தியவன்’ - ஓபிஎஸ்

கரூர்: ஸ்டாலின் ‘டீ’ கடைகளுக்கு செல்லலாம், ஆனால் நான் ‘டீ’ கடையே நடத்தியவன் என தேர்தல் பரப்புரையில் ஓபிஎஸ் பேசியுள்ளார்.

ops
author img

By

Published : Mar 29, 2019, 2:41 PM IST

கரூர் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலின்போது ஸ்டாலின் கலர் கலராக சட்டைப் போட்டுக்கொண்டு டீ கடைகளுக்கு சென்றார். ஆனால் நான் ‘டீ’ கடையே நடத்தியவன் என தெரிவித்தார்.

கரூர்

மேலும், அடிக்கின்ற தேர்தல் சுனாமியில் திமுக காணாமல் போகிவிடும் என பேசிய அவர், மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்துவரும் அதிமுக வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கரூர் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலின்போது ஸ்டாலின் கலர் கலராக சட்டைப் போட்டுக்கொண்டு டீ கடைகளுக்கு சென்றார். ஆனால் நான் ‘டீ’ கடையே நடத்தியவன் என தெரிவித்தார்.

கரூர்

மேலும், அடிக்கின்ற தேர்தல் சுனாமியில் திமுக காணாமல் போகிவிடும் என பேசிய அவர், மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்துவரும் அதிமுக வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அடிக்கின்ற தேர்தல் சுனாமியில் தேர்தல் முடிவில் திமுக காணாமல் போகும், டீக்கடையில் டீ குடித்து ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என்ற ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது, ஏனென்றால் நாங்களே டீக்கடை நடத்தியவர்கள்தான்-புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஓபிஎஸ்  பேச்சு.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள செக் போஸ்டில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம்  பரப்புரை மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில் :-

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் அதிமுக-திமுக என இரண்டு மிகப்பெரிய கூட்டணிகளில் எந்தக் கூட்டணி வெற்றி அடைய கூடும் என்று முடிவு செய்யக்கூடிய எஜமானர்களாக மக்கள் இருக்கிறீர்கள், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது மக்கள் பிரச்சினைகள் கண்டுகொள்ளாமல் இருந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது எந்த ஒரு தொலைநோக்கு திட்டத்தை தமிழக மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை, ஜீவாதார திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை, திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது ஜெயலலிதா கருணாநிதியிடம் நீங்கள் மனது வைத்தால் காவேரி நடுவர் மன்றத்தை வலியுறுத்தி கொண்டுவரலாம் என்று கூறினார், ஆனால் அப்போது அது நிறைவேற்றப்படவில்லை பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் தான் காவேரி மேலாண்மை திட்டம் வாதாடி போராடி கொண்டு வரப்பட்டது, கருணாநிதியால் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை, அது கையாலாகாத தனத்தை காட்டியுள்ளது மக்களை ஏமாற்றி ஓட்டை மட்டும் வாங்கி சென்றார்கள் அவர்களுக்கு தக்க பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும், ஏழைகள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 2021ல் முழுமையாக முடிக்கப்பட்டு அனைவருக்கும் வீடு கொடுத்து வீடு இல்லாதவர்கள் இல்லாத நிலைமை கொண்டு வரப்படும், பெண்கள் நாட்டு கண்கள் என்று உணர்ந்த அதிமுக அரசு தாலிக்குத் தங்கம் பேறுகால உதவி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வருகிறது, பெண்களின் குடும்ப சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே விலையில்லா மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது, தமிழகத்தில் எந்த ஒரு ஜாதி மத கலவரமும் இல்லை சிறுபான்மையினர் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் எந்த ஒரு அச்சுறுத்தலுமின்றி வாழ்ந்து வருகின்றனர், அனைத்து தரப்பு மக்களும் எந்த ஒரு குறையுமின்றி வாழ்ந்து வருகின்றனர், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக காணாமல் போகும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார் ஆனால் அவர் காணாமல் போவார், அடிக்கிற சுனாமியில் ஸ்டாலின் எங்கு போய் விழுவார் என்றே தெரியவில்லை, தொண்டர்களால் உருவாக்கப்பட்டது அதிமுக பல்வேறு ஜாதி கட்சிகள் வேண்டுமென்றால் ஒழிந்திருக்கலாம் ஆனால் அதிமுக ஒரு போதும் ஒழியாது, தொண்டர்கள் தலைவராவது அதிமுகவில் மட்டும்தான் காங்கிரஸிலேயோ திமுகவிலேயோ தொண்டர்கள் தலைவராக வர முடியாது, தனிப்பட்ட மனிதர்களின் துதிப்பாடல் அதிமுகவில் இல்லை, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு யார் காணாமல் போவார்கள் என்று மக்களுக்கு தெரியும், தீயிட்டு தமிழகத்தை கொளுத்துவதாக எங்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு வைக்கிறார் நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா திரிந்து வருகிறோம், திமுக ஆட்சியில்தான் தினகரன் பத்திரிக்கை கொளுத்தப்பட்டது அவர்கள் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது, திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதே பிரியாணி கடையில் பரோட்டா கடையில் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சண்டையிட்டு வருகின்றனர், நாங்கல்லாம் எங்கு சாப்பிட்டாலும் காசு கொடுத்து தான் சாப்பிடுவோம், சமூக வலைதளங்களில் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஸ்டாலின் கடந்த தேர்தலில் முதல்வர் ஆகி விடுவோம் என்ற எண்ணத்தில் கலர் கலராக சட்டை பேண்ட் போட்டுக் கொண்டு சென்றார் டீக்கடையில் டீ குடித்தார், ஆனால் நாங்கள் டீ கடையை நடத்தி உள்ளோம், சுனாமி பூகம்பமே வந்தாலும் அசையாது இயக்கம் அதிமுக, இந்த தேர்தல் எடைபோட்டுப் பார்க்க வேண்டிய தேர்தல் யார் ஆட்சியில் நல்லது நடந்தது யார் ஆட்சியில் வன்முறை நடந்தது என்பதை உணர வேண்டும், மீண்டும் வன்முறை ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டுக் கேட்டு வரக்கூடிய கூட்டணி திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

இதில் கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட  5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.