கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் எட்டு வட்டத்தில் 78,517 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் 2,000 பேர் முறைகேடாக பணம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் விசாரணைக்குழு மேற்கொண்ட ஆய்வில், விவசாயிகளின் ஆதார் எண், பெயர், முகவரி சிட்டா எண்ணும், பிரதம மந்திரி கிசான் இணையதளத்தில் உள்ள முகவரியும் சரி பார்த்ததில், குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே வீட்டில் இரண்டு நபர்களுக்கும், வெளி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சுமார் 2,000 பேர் முறைகேடு செய்து பணம் பெற்று வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.