ETV Bharat / state

இடிந்து விழும் நிலையில் பழைமை வாய்ந்த அரசுப் பள்ளி கட்டடம்

கரூரில் 55 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுப் பள்ளி கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசுப் பள்ளி கட்டடம்

author img

By

Published : Dec 22, 2021, 5:02 PM IST

கரூர் : திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்து மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பள்ளி கல்வித் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இடிந்து விழும் நிலையிலுள்ள அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 18 பள்ளிகளில் 20 வகுப்பறை கட்டடங்கள் கண்டறியபட்டுள்ளன. குளித்தலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பழுதடைந்த வகுப்பறை கட்டடத்தை இடிக்கும் பணிகளையும் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளிலுள்ள கட்டட உறுதித்தன்மையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நடவடிக்கைகள் மேற்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளில் கட்டுப்பாட்டிலுள்ள அரசுப் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய அந்தந்த துறை அலுவலர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசுப் பள்ளி கட்டடம்

இதனிடையே கரூர் தாந்தோணி வட்டாரத்திலுள்ள பாகநத்தம் பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் 1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கூரை ஓடு பெயர்ந்து விழுந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இது குறித்து ஈடிவி பாரத் தமிழ் களத்திற்குச் சென்று சேகரித்த தகவல் அடிப்படையில், 1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தினை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2013-2014 CSIDS நிதியில் ரூ 1.53 லட்சம் நிதியில் பழுது நீக்கம் செய்து பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த பள்ளியில் ஆய்வு

பள்ளி கட்டடம் பராமரிக்கபட்டுள்ளது எனில் எப்படி மேற்கூரை இடிந்து விழுந்தது என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.