கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி நடுநிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து 1000ஆவது நாள் நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி தலைமை தாங்கினார். திருநங்கை சுஜாதா முன்னிலை வகித்தார்.
முன்னதாக தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் திருநங்கையர் ஆகியோரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
பின்னர் அங்கன்வாடி பணியாளர்களின் பணி, சேவை பற்றி தலைமை ஆசிரியர் பேசினார். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து "போஷன் அபியான்" என்ற பெயரில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள், திருநங்கைகள் மற்றும் வளர் இளம்பெண்கள் இணைந்து ஊட்டச்சத்து, தன்சுத்தம் சார்ந்த பாடலைப்பாடி கொண்டே கும்மி அடித்தனர். இறுதியாக வீதிகளில் இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று மணவாசி டோல்கேட்டில் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.