ETV Bharat / state

காவிரி நீர் பங்கீடு முறைப்படுத்தாவிட்டால் திமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி - Cauvery water issue

Nallasamy: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, மீண்டும் வழக்கு நடத்தப்பட வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் பங்கீடு முறைப்படுத்தாவிட்டால் திமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என கள் நல்லசாமி தெரிவித்துள்ளார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 9:01 PM IST

காவிரி நீர் பங்கீடு முறைப்படுத்தாவிட்டால் திமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என கள் நல்லசாமி தெரிவித்துள்ளார்

கரூர்: கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஈடிவி பாரத் செய்திகளுக்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “கர்நாடக அரசு காவிரியில் வரும் நீரை, கர்நாடகாவில் உள்ள நீர் தேக்கங்களின் தேக்கி வைத்து, தமிழ்நாட்டுக்கு மாதாந்திர அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் வரை, கர்நாடகாவின் வடிகாலாக தான் தமிழ்நாடு இருக்க வேண்டி வரும்.

இந்த காவிரி தீர்ப்பு என்பது ஒரு ஏட்டுச் சுரைக்காய், கானல் நீர், மாயமான். மேலும், காவிரி நீர்பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, மீண்டும் காவிரி நடுவர் மன்றத்தை தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நாடவிருக்கின்றோம். கடந்த 33 ஆண்டுகளாக கர்நாடகம் எப்போது காவிரியில் தண்ணீர் திறந்திருக்கின்றது?

இனிமேல் தேக்கினால், கர்நாடக நீர்தேக்கங்கள் உடையும் என்பதால் மட்டுமே. அவர்களின் பாதுகாப்பிற்காக திறந்துள்ளார்காளே ஒழிய தமிழ்நாடும், புதுவையும் கடமடை உரிமை பெற்ற மாநிலம் என்று சொல்லி எப்போதும் திறந்ததில்லை. இனிமேலும் திறக்க போவதில்லை. இதற்கு தீர்வு வேண்டுமென மீண்டும் நாங்கள் காவிரி நடுவர் மன்றத்தை நாடவிருக்கின்றோம்.

தமிழகத்தில் கள் பற்றிய பார்வை பலருக்கும் இல்லை. தமிழக சட்டசபையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், “தமிழ்நாடு அரசு கள் விற்பனை செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்” என்கிறார்.

இதையே தான் பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலையும் மேடையில் பேசி வருகின்றார். இருவரின் பேச்சும் புரிதல் இன்மையின் வெளிப்பாடாக இருக்கிறது. கள்ளுக்கு அனுமதி என்பது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவை. அதற்கு எதற்காக அனுமதி கேட்க வேண்டும். 1950 ஜனவரி 26-இல் அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும், அச்சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும், பருகுவதுவும்.

தமிழ்நாடு அரசு, கலப்படத்தை காரணம் காட்டி அநியாயமாக இந்த உரிமையை பறித்துக் கொண்டது. அண்டை மாநிலங்களில், உலக அளவில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது. அங்கும் கள் விற்பனையில் கலப்படம் செய்வார்கள். ஆனால், அந்த அரசுகள் எல்லாம் கலப்படத்தை கட்டுப்படுத்துகின்ற பொழுது, தமிழ்நாட்டில் மட்டும் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தமிழ்நாடு அரசு ஆளுமை அற்ற அரசா? ஆளுமை இல்லாதவர்கள் ஏன் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும்.

ஒரு பனை மரத்து கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால், பல நோய்கள் குணமாகும், இது மருத்துவம். கள் விற்பனை செய்ய, ஏல அடிப்படையில் கடை திறக்கபட்டு விற்பனை செய்தால், ஒரு மரத்து கள் கூட கிடைக்காது. களப்பட கள் மட்டுமே கிடைக்கும். அப்படி ஒரு நிலை வருகின்ற பொழுது, அரசியலமைப்புச் சட்டம் 47-வது பிரிவில் சொல்லப்பட்டு இருக்கும் “எக்ஸப்ட் பார் மெடிக்கல் பர்பஸ்” சட்ட விதிமுறை பொருளற்று போய்விடும்.

ஆகவே இந்திய அரசியலமைப்பு சட்டப்படி கள்ளுக்கு தடையும் கூடாது. கள் விற்பனை செய்ய தனிக்கடையும் கூடாது. இதை முன்னிறுத்தி, வரும் ஜனவரி மாதம் 21-ஆம் தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. பவானி பாசன வாய்க்கால்களுக்கு உட்பட்ட திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில், விவசாயிகள் நீர் பாசன வசதி பெற்றுவரும் நீர்நிலை நிர்வாகம், சட்ட விதிமுறைகளை முறையாக பயன்படுத்தி பாசன நீர் வசதி செய்வதில்லை.

தமிழக நீர்வளத்துறை நீர் பங்கீடு செய்வதில், அரசு ஆணை, விதிமுறை, காவிரி தீர்ப்பு என எதுவும் பின்பற்றப்படுவதில்லை. நீர்வளத்துறையானது தன்னுடைய விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலேயே இன்றைய தேதி வரை நீர் நிர்வாகத்தை நடத்திக் கொண்டு வருகின்றது.

எப்படி தவறான காவிரி தீர்ப்பால் இன்று சம்பா சாகுபடி கேள்விக்குறியாக இருக்கின்றதோ, அதுபோல கீழ்பவானி நீர் பாசனத்தில் நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்து ஐயாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி கேள்விக்குறியாக இருக்கின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழக அரசின் தவறான நீர் நிர்வாகம். பழைய பவானி நீர் பாசனங்களுக்கு, பழைய ஆயக்கட்டு கொடிவேரி மற்றும் காளிங்கராயன் பாசன வாய்க்கால்களில் ஆண்டு ஒதுக்கீடு 8.13 டிஎம்சி.

ஆனால் ஆண்டுதோறும் நீர்வளத்துறை விடுகின்ற நீரின் அளவு 30 டிஎம்சி. மிக அதிகமாக நீர் வழங்கப்படுகிறது. இதனால், கீழ் பவானி பாசன வசதி பெறும் கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மோசமான நீர் பங்கீடு சரி செய்யப்பட்டு முறைப்படுத்தாவிட்டால், அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் போனால், விவசாயிகள் நாங்கள் தொடர்ந்து செம்மறி ஆடுகளாக இருக்க மாட்டோம்.

வரக்கூடிய தேர்தலில் இந்த நான்கு தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், அதன் கூட்டணி வேட்பாளர்களும் கட்டாயம் தோற்கடிக்கப்படுவார்கள். 2024 தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தையும், உலகளாவிய நடைமுறையையும் ஏற்று, கள்ளுக்கு விதித்து இருக்கக்கூடிய தடையை நீக்கி அறிவிக்க வேண்டும்.

தவறினால், தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களும் கட்டாயமாக தோற்கடிக்கப்படுவார்கள். தவறான காவிரி தீர்ப்பு காரணமாக இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு உண்டான உரிமைகளை பெற முடியவில்லை. இதன் காரணமாக குறுவை பயிர் 2 லட்சம் ஏக்கரில் காய்ந்து போனது.

சம்பா சாகுபடி கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கின்றது. இதைப் பற்றி ஆளுகின்ற தரப்பு பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்தரப்பும் விமர்சிப்பதில்லை. மாறாக, கொடி நடுவதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பெரிதாக்கி கொண்டிருக்கின்றார்கள்” எனக் கூறினார்.

மேலும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து பதில் அளித்த கள் நல்லசாமி, “காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, மீண்டும் இந்த வழக்கு நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆகவே மீண்டும் இந்த வழக்கை திறந்து, காவேரி நடுவர் மன்றத்தை அணுகி ஒரு தீர்வு காண வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.