ETV Bharat / state

பாலியல் புகார்: நடன கலைஞர் ஜாகிர் உசேன் கூறுவது என்ன?

பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், நடன ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

இசைப்பள்ளி ஆசிரியை அறைக்கு உள்ளே அழைத்து கதவை மூடி  ஜாகிர் உசேன்  பாலியல் தொல்லை music-teacher-sexual-harassment-complaint-against-zakir-hussain-who-went-to-inspect-music-school-in-karur கரூரில் இசைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்ற ஜாகிர் உசேன் மீது இசைப்பள்ளி ஆசிரியை பாலியல் தொல்லை.. முழு பின்னணி..
இசைப்பள்ளி ஆசிரியை அறைக்கு உள்ளே அழைத்து கதவை மூடி ஜாகிர் உசேன் பாலியல் தொல்லை music-teacher-sexual-harassment-complaint-against-zakir-hussain-who-went-to-inspect-music-school-in-karurகரூரில் இசைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்ற ஜாகிர் உசேன் மீது இசைப்பள்ளி ஆசிரியை பாலியல் தொல்லை.. முழு பின்னணி..
author img

By

Published : Apr 5, 2022, 3:15 PM IST

Updated : Apr 5, 2022, 7:23 PM IST

கரூர்: தமிழ்நாட்டில் மாவட்ட அரசு இசைபள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக பரதநாட்டியக் கலைஞர் அ. ஜாகிர் உசேன் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஜாகிர் உசேன் கரூரில் உள்ள கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்குள்ள பரதநாட்டிய ஆசிரியை ஒருவரைத் தலைமை ஆசிரியை அறைக்கு உள்ளே அழைத்து, கலை நுணுக்கங்களை சொல்லிக் கொடுப்பதாக அவரிடம் அநாகரீகமாக ஜாகிர் உசேன் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை கலை பண்பாட்டுத்துறை இயக்குநருக்குப் புகார் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் இசைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்ற ஜாகிர் உசேன் இசைப்பள்ளி ஆசிரியை பாலியல் தொல்லை
ஜாகிர் உசேன்

இதனிடையே, பாதிக்கப்பட்ட இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை ஈடிவி பாரத்துக்கு அளித்த ஆடியோ உரையாடலில், “பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த தான், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அரசு இசை பள்ளி நடன ஆசிரியராக பணியாற்றிவருகிறேன்.

ஆனால் பாலியல் ரீதியான தொல்லை தரும் சம்பவங்கள் நடைபெறும் எனக் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை என கூறியுள்ளார். கடந்த பிப்.28ம் தேதி பள்ளிக்கு வருகை தந்த ஜாகிர் உசேன், சக ஆசிரியர்கள், தன்னிடம் பயிலும் மாணவ மாணவிகள் முன்னிலையில் ஆய்வு என்ற பெயரில் தன்னை ஒருமையில் பேசியதாகவும் அந்த ஆசிரியை கூறியுள்ளார்.

ஜாகீர் உசேன் கதவை மூடி இசைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை

அதன் பின்னர் பள்ளி முழுவதும் ஆய்வு செய்துவிட்டு தலைமை ஆசிரியை அறைக்கு உள்ளே தனியாக அழைத்து, கதவை மூடிக்கொண்டார் என கூறியுள்ள அந்த ஆசிரியை, செய்வதறியாது திகைத்த தன்னிடம் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தங்களைப் போன்ற நடனப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தான் மட்டும் சில நுணுக்கங்களைக் கற்பிக்க உள்ளதாகக் கூறி தன் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் கைகளை வைத்து அநாகரிகமாக நடந்து கொள்ள முயற்சித்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.

உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேறியதாகவும், தன்னுடைய மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் நின்று கொண்டு இருந்ததால் அவர்களிடம் எதுவும் தெரிவிக்க முடியவில்லை என்றும், பின்னர் நடந்தவற்றைத் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்து, கலை பண்பாட்டு துறையின் இயக்குநருக்குப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் அந்த ஆசிரியை கூறியுள்ளார்.

வெளிப்படுத்திக் கதறி அழுதேன்: ஆனால், மார்ச் 31-ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனவேதனையில், சென்னையில் உள்ள கலை பண்பாட்டு துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்திக் கதறி அழுதேன்.

வாட்ஸ் ஆப்பில் வந்த அழைப்பு: ஆனால் அன்றே தனது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பப்பட்ட துறைரீதியான கடிதத்தில் கட்டாயம் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் 3 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் வேறொரு நாளில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பினர்.

கரூர் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்குக் கரூர் மாவட்ட ஆட்சியர் தன்னை ஒரு சகோதரியாக எண்ணி இதற்கு மேல் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், தமிழ்நாடு முதலமைச்சரும் தனது புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அந்த ஆசிரியை தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அரசு விசாகா கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும்: இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து, தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையில் இசைப் பள்ளி, கல்லூரிகளுக்கு கலையியல் அறிஞராக உள்ள ஜாகிர் உசேன் தனது முகநூல் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சருடன் துபாய் பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய போதுதான் ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் பார்த்து தன் மீதான புகார் குறித்து அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

.
.

இஸ்லாமியர் என்பதால் சிலரின் தூண்டுதல் பேரில் புகார்: மேலும், கரூரில் நடைபெற்ற சம்பவம் கரூர் இசைப் பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலையில்தான் சம்பந்தப்பட்ட பரதநாட்டிய ஆசிரியையிடம் தான் சரியாக நடனம் கற்றுக் கொடுக்காத காரணம் குறித்துக் கேட்டறிந்ததாகவும் தான் ஒரு இஸ்லாமியர் என்பதால் சிலரின் தூண்டுதல் பேரில் தன்மீது இவ்வாறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு இதில் விசாகா கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜாகிர் உசேன் கூற்று ஏற்புடையதல்ல: இதுகுறித்து அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் பொதுச்செயலாளர் பா. ஐயனார் கூறுகையில், “அரசு இசைப் பள்ளிகளில் திறமையான இசை மேதைகளை உருவாக்கி வரும் ஆசிரியர்களுக்குத் திறன் குறைபாடு உள்ளதாக ஜாகிர் உசேன் கூறுவது ஏற்புடையது அல்ல.மேலும் பயிற்சியில் கட்டாயம் நடனப்பள்ளி பெண் ஆசிரியைகள் கலந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் வேறு ஒரு நாளில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என ஜாகிர் உசேன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கடிதம் அனுப்பி உள்ளதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன” என்றார்.

மேலும், “பாதிக்கப்பட்ட பெண் நடன ஆசிரியையின் புகார் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக அ. ஜாகிர் உசேன்-ஐ நியமனம் செய்து உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு - நால்வரை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

Last Updated : Apr 5, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.