இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூரில் பிப்ரவரி 21ஆம் தேதி இரவு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
அடித்து, கொலை மிரட்டல் விடுத்து, கைப்பேசியைப் பறித்து அராஜகம் செய்திருக்கிறார்கள். ஊடக நண்பர்கள் முதலமைச்சர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
கரூரில் முதலமைச்சர் வருவதற்கு முன்பே கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. மக்கள் வரவேற்புக்கு கட்டியிருந்த வாழைத்தாரை அறுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். நாற்காலிகள் காலியாக கிடந்துள்ளன.
இதைப் படம்பிடித்தார்கள் என்று ஊடகவியலாளர்களை அதிமுகவினர் தாக்கியிருக்கிறார்கள். தோல்வி பயம் அமைச்சர்களில் ஆரம்பித்து அதிமுகவினரைத் துரத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரூரில் எம்பி ஜோதிமணி கைது: குண்டுக்கட்டாகத் தூக்கிய காவலர்கள்!