நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சம்பந்தம் பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி மனோ பிரியா வயது 28. இவர்களுக்கு மோகித் என்கிற 11 மாத பெண் குழந்தை உள்ளது. மனோ பிரியாவின் கணவர் மகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகியும் பெங்களூருக்கு பிரியாவையும், குழந்தையையும் மகேஷ் அழைத்துச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பிரியா கரூரில் இருக்கும், அவரது தந்தை காளியப்பன் வீட்டிற்கு இன்று காலை சென்றுள்ளார்.
மகளை வீட்டில் விட்டுவிட்டு சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய காளியப்பன், வீட்டில் தனது மகள் மனோ பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும், குழந்தை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்யப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.