ETV Bharat / state

ஆட்சியரை இழிவாக பேசிய செந்தில் பாலாஜி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு - MLA has spoken out against the Karur ruler

கரூர்: ஆட்சியரை இழிவாக பேசிய அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

author img

By

Published : May 18, 2020, 9:29 PM IST

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா தொடர்பான கூட்டத்திற்கு ஆட்சியர் என்னை அழைப்பதில்லை, அவர் ஒரு படித்த முட்டாள்" என குற்றஞ்சாட்டியும் இழிவாகவும் பேசினார்.

மாவட்ட ஆட்சியரை இதுபோன்று பேசிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கடந்த 16ஆம் தேதி கரூர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார்.

இதையடுத்து, 5 பேருக்கு அதிகமாக கூடுதல், கிருமி பரப்பும் நோக்கில் செயல்படுதல், தவறான வார்த்தை பயன்படுத்தி இழிவாக பேசுதல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூர் ஆட்சியரை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைப்போம்’ - செந்தில் பாலாஜி காட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.