ETV Bharat / state

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஸ்டாலின் கரூர் வருகை - செந்தில் பாலாஜி ஆய்வு!

author img

By

Published : Jun 28, 2022, 7:32 PM IST

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஸ்டாலின் கரூர் வருகை - செந்தில் பாலாஜி ஆய்வு!
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஸ்டாலின் கரூர் வருகை - செந்தில் பாலாஜி ஆய்வு!

கரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கரூர் மாவட்டத்திற்கு முதன்முறையாக ஜூலை 1 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரவுள்ளார். முதலமைச்சரான பிறகு முதன்முறையாக வரும் முதலமைச்சருக்கு கட்சியின் சார்பிலும், அரசின் சார்பிலும் வரவேற்பு அளிப்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று (ஜூன் 28) கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கரூர் மாவட்ட தொழில் நிறுவனங்களின் சார்பில் முதலமைச்சரிடம் எடுத்து வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து தொழில் முனைவோர்களுடன் கரூர் ஹேமலா தனியார் விடுதியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேடை அமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு, வருகிற ஜூலை 1 அன்று வருகை தரவுள்ளார். இவ்வாறு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கவும், தொழில் முனைவோர்களுடன் தொழில் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டமும் நடைபெறுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஸ்டாலின் கரூர் வருகை - செந்தில் பாலாஜி பேட்டி

இதனைத் தொடர்ந்து ஜூலை 2 ஆம் தேதி, திருமாநிலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 76,000 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1,10,000 பேர் பங்கேற்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓபிஎஸ் தரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.