ETV Bharat / state

216 துணை மின்நிலையங்களும் ஒரே நேரத்தில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி - கரூர் செய்திகள்

மின்சார வாரியத்தை மேம்படுத்துவதற்காக மின்சார வாரியத்தில் ஒரே நேரத்தில் 216 துணை மின் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Oct 6, 2021, 4:25 PM IST

கரூர்: கொளந்தகவுண்டனூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 25ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பழுதடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியவர் பிரபுசங்கரின் நடவடிக்கையால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற்றபட்டு கரூர் பசுபதிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்காலிக முகாம்கள் அமைத்து அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (அக்.05) பழுதடைந்ந கொளந்தகவுண்டனூர் அடுக்குமாடி குடியிருப்பை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து நிவாரண உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

ராஜாவுக்கு ராஜாவான ஸ்டாலின்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 'அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் விரைவில் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று, புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மைக்கல்லூரி, காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு புதிய தடுப்பணைகள் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதியளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து மாத காலத்தில் சட்டவிரோதமான லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மக்கள் விரும்பும் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலுள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் முதலமைச்சராக ஸ்டாலின் விளங்கி வருகிறார்' என்றார்.

சூரிய மின்சக்திப் பூங்கா திட்டம்

தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ்நாட்டின் மின்சாரத்தேவை நாளொன்றுக்கு 16 ஆயிரம் மெகா வாட்டாக இருப்பதாகவும்; தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் மூலம் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் 22 விழுக்காடு போக மீதமுள்ள ஒன்றிய அரசின் பங்கீடு, தனியாரிடம் கொள்முதல் செய்யக்கூடிய மின்சாரம் என ஏறத்தாழ 50 விழுக்காடு மின்சாரம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்து மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறோம்.

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் நிலையினை மாற்றி உற்பத்தி செலவை குறைத்துத் தரமான சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்புத்திட்டங்களை வழங்கியுள்ளார்.

இவற்றில் குறிப்பாக சூரிய சக்தி வாயிலாக மின் உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தை முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

216 துணை மின்நிலையங்கள் கட்டமைப்பு

குறிப்பாக இந்தாண்டு 4ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்திப் பூங்காவின் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்சக்திப் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கட்டமைப்புகளைப் பொறுத்தவரையில் 204 புதிய மின் நிலையங்கள் அமைப்பதற்கு 12 துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்துவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாட்டில் முதல்முறையாக 216 துணை மின்நிலையங்கள் கட்டமைப்பு ஒரே நேரத்தில், கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 3.16 கோடி மின் இணைப்புகள் உள்ளன. ஒவ்வொருவரின் இணைப்புக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

99 விழுக்காடு புகார்களுக்கு தீர்வு

அதேசமயம் அடிக்கடி மின் பழுதுகள் ஏற்படுவதற்கு உயர் மின் அழுத்தம் மற்றும் குறைவான மின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் 8ஆயிரத்து 905 மின்மாற்றிகள் மாற்றியமைக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மின்சாரத் துறை சார்ந்த நுகர்வோரின் புகார்களுக்கு மின்னகம் மூலம் 3.53 லட்சம் புகார்கள் பெறப்பட்டு 3.50 லட்சம் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது. 99 விழுக்காடு அளவுக்கு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ், கரூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'நெல் கொள்முதல்; ஆன்லைன் பதிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.