ETV Bharat / state

IT Park in Karur:'மேட் இன் கரூர் பிரபலமடைய வேண்டும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

IT Park in Karur:கரூரில் இன்று மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் விரைவில் புதிய ஐடி பார்க் அமைப்பதற்கான வேண்டுகோள் முதலமைச்சரிடத்தில் வைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

IT park in karur  senthil balaji said  made in karur will became famous  'மேட் இன் கரூர் பிரபலமடைய வேண்டும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி  கரூரில் ஐடி பார்க்  புதிததாக சிப்காட் பூங்கா
கரூரில் ஐடி பார்க்
author img

By

Published : Dec 19, 2021, 4:59 PM IST

கரூர்: (IT Park in Karur): கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மையம் சார்பில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பணிடங்களுக்கு வேலைதேடும் படித்த இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான போட்டியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, 'நேற்று கோவை மாவட்டத்திலும் இன்று கரூரிலும் நடைபெற்றுவரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தனியார் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

நிச்சயம் அரசு வேலைவாய்ப்புகள் தகுதியானவர்களுக்கு கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு அளிக்கும்' எனக் கூறினார்.

கரூரில் ஐடி பார்க்

கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து பேசிய தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'Made in Karur' என்று உலகளவில் பேசும் அளவிற்கு கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் முதன்மை பெறும்.

தமிழ்நாட்டில் வேலையின்மையை உருவாக்கும் நோக்கோடு முதலமைச்சரின் முயற்சியால் பல்வேறு நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றார்.

கரூர் மாவட்டத்தில் விரைவில் புதிய ஐடி பார்க் அமைப்பதற்கான வேண்டுகோள் முதலமைச்சரிடத்தில் வைக்கப்படும்.

இதன்மூலமாக கரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பை முதலமைச்சர் ஏற்படுத்தித் தருவார்கள்.

புதிததாக சிப்காட் பூங்கா

ஜவுளி நகரமான கரூரில் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் இதன் வர்த்தகத்தை ரூ. 25 ஆயிரம் கோடியாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைப்பதற்கான ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

'Made In Karur பிரபலமடைய வேண்டும்'

IT park in karur  senthil balaji said  made in karur will became famous  'மேட் இன் கரூர் பிரபலமடைய வேண்டும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி  கரூரில் ஐடி பார்க்  புதிததாக சிப்காட் பூங்கா
'Made In Karur பிரபலமடைய வேண்டும்' - அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்பெல்லாம் ஒரு பொருள் வாங்கும் போது அதில், Made in china என்று இருக்கும். அதைப் பார்த்து வாங்குவோம்.

பிறகு, Made in India என்று கூறினோம். தற்போது, Made in Tamilnadu என்று மாற்றுவதற்கான முயற்சியில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். அதேபோல, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் Made in Karur என்று உலகம் முழுவதும் பேச, நமது ஏற்றுமதி வர்த்தகம் சிறந்து விளங்கும் அளவிற்குச் செயல்பட வேண்டும்' என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, வேலைவாய்ப்பு இணை இயக்குநர் குணசேகரன், மகளிர் திட்ட இயக்குநர் வாணிஸ்வரி, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:DMK: பேராசிரியர் அன்பழகன் 100ஆவது பிறந்தநாள்... சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.